முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 1.67 கோடியில் கால்நடை உலர் தீவனம்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர்.

 

கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் உலர் தீவனம் ரூபாய் 1.67 கோடி செலவில் வழங்கப்பட்ட உள்ளது. கடலூர், மேல்பட்டாம்பாக்கம், பி.முட்லூர், புவனகிரி, குமராட்சி, நல்லூர், தொழுதூர், ஒரங்கூர், திட்டக்குடி ஆகிய 9 உலர் தீவன கிடங்குகள் மூலம் வழங்கப்படுகிறது. கிடங்கு ஒன்றிற்கு ரூபாய் 18.27 லட்சம் உலர் தீவனம் 96 ஆயிரத்து 500 பயனாளிகள் பயன் பெறுவர். ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம் வாரத்திற்கு 21கிலோ, 1 கிலோ ரூபாய் 2 வீதம், 5 மாடுகளுக்கு 105 கிலோ அதிகபட்சம் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும். ரூபாய் 12 லட்சம் செலவில் சோளம் சாகுபடி செய்யப்பட்டு ஒரு மாட்டிற்கு வாரத்திற்கு 15கிலோ வீதம், 57 ஆயிரம் கால்நடைகளை பராமரிக்கும் 469 விவசாயிகள் 600 ஏக்கர் பயிரிட்டு வருகின்றனர். சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நிலம் பதப்படுத்த ரூபாய் 825, உரம் வாங்க ரூபாய் 675, விதை வாங்க ரூபாய் 560 என மொத்தம் 2 ஆயிரம் மான்யம் வழங்கபடுகிறது. தாது உப்புக் கலவை கறவை மாட்டிற்கு 2 கிலோ வீதம், 40 ஆயிரம் கறவை மாடுகளுக்கு 8 டன் ரூபாய் 56 லடசத்து 28 ஆயிரம் செலவில் வழங்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா கடலூர் புதுப்பாளையம் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமை தாங்கி உலர் தீவனத்தை பயனாளிகளுக்கு வழங்கினார். துணை இயக்குனர் திருநாவுக்கரசு வரவேற்றார். இணை இயக்குனர் பி.மோகன் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் ஆர். மோகன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago