முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் அருகே புத்தர் கோவிலில் உலக அமைதி கோபுர பணி முடிவடைய பிரார்த்தனை கலெக்டர் கருணாகரன் பங்கேற்பு

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      திருநெல்வேலி

சங்கரன்கோவில்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் உலக அமைதிக்கான, தென்னிந்தியாவின் மிக பெரிய புத்தர் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலில் உலக அமைதிக்காக 120 அடியில் பிரமாண்டமான கோபுரம், ஸ்தூபி  கட்டும் பணி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.  தற்போது 70 அடி முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணி சிறப்பாகவும், விரைவாகவும் நடைபெற வேண்டி நேற்று காலை பிரார்த்தனையும், சர்வ சமய வழிபாடும் நடைபெற்றது.  நிகழ்ச்சியை முன்னிட்டு உலக அமைதி ஸ்தூபிக்கு முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நடைபெற்ற வழிபாட்டை புத்த துறவிகள் இஸிதானிஜீ,  லீலாவதி, கிமூரா ஆகியோர் நடத்தினர்.  இந்த பிரார்த்தனையில் நெல்லை கலெக்டர் கருணாகரன், சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் இராஜேந்திரன், பிரஜா பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் புவனேஸ்வரி, சமூக ஆர்வலர் டிடிவி பிரேம்குமார், புத்தர் கோவிலுக்கு இடம் வழங்கிய முத்தையா குடும்பத்தினர், தாமரை கழக நிறுவனர் ரபாகு மற்றும் அனைத்து சமுதாய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிப்போன்சன் மியோ ஹோஜி அமைப்பை புத்த துறவிகள் செய்து இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்