Idhayam Matrimony

அதிமுக ஆட்சி அமைக்கவிடாமல் திமுகவோடு சேர்ந்து எதிர்த்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      விழுப்புரம்

செஞ்சி,மார்ச்.06-

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவோடு சேர்ந்து கொண்டுஅதிமுக ஆட்சி அமைக்கவிடாமல் எதிர்த்து வாக்களித்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்

செஞ்சி, அனந்தபுரம் நகர, மற்றும் செஞ்சி ஒன்றிய  அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது.நிர்வாகிகள் கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய அதிமுக  செயலர் அ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும் அமைச்சருமான சி.வி.சண்முகம், ஆரணிநாடாளுமன்ற உறுப்பினர் வெ.ஏழுமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சிராமச்சந்திரன், அதிமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் தீரன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில்  அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது: பதவி சுகத்தை அனுபவத்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது பதவி இல்லாமல் தவிக்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் வாக்கெடுப்பின்போது அதிமுக ஆட்சி அமைக்கமால் திமுகவுடன் சேர்ந்து தடுத்துவிடலாம் என அதிமுக ஆட்சி வராமல் இருக்க எதிர்த்து வாக்கு அளித்தார்.சசிகலா தயவால் மூன்று முறை முதல்வர் பதவியை வகித்து சுகங்களை அனுபவித்தார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யும் முன்னே இரவோடு இரவாக முதல்வர் பதவியை ஏற்றார். எம்எல்ஏக்களிடம் 3 வெள்ளை பேப்பரில் கையெழுத்தை வாங்கினார். ஏன் என்று கூறவில்லை. 75 நாட்கள் முதல்வர் பதவியை வகித்தபோது அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா நலமாக உள்ளார் என பேட்டி அளித்தார். ஆனால் இப்போது ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக கூறுகிறார். மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்க பாடுபடுகிறார். இதற்காகவா ஜெயலலிதா மூன்று முறை ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கினார். ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தால் எழுந்து நி்ற்காத திமுகவினர். ஓ.பன்னீர்செல்வம் வரும்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எம்எல்க்கள் எழுந்து நின்று கும்பிடு போடுகின்றனர். இதன் மூலம் உங்களின் கள்ள உறவு அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ட்டத்தில் வல்லம் ஒன்றிய செயலர் கு.விநாகமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலர்கள் கு.கண்ணன், அ.கெளதம்சாகர், நகர எம்ஜிஆர் மன்ற செயலர் ஆர்.சரவணன், மாவட்ட மாணவரணி இணை செயலர் ஜெ.கமலக்கண்ணன். மாவட்ட மகளிர் அணி மல்லிகா குமார், பாசறை இணை செயலர் அனுகுமார், இலக்கிய அணி வெங்கடேசன், அனந்தபுரம் நகர செயலர் அரிராமன், மாவட்ட மருத்துவர் அணி ராமச்சந்திரன், சோழன், ஜெகதீசன், லட்சுமிகாந்தன், வழக்குரைஞர் சின்னையா வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செஞ்சி நகர நிர்வாகிகள் கூட்டம் செஞ்சியிலும், செஞ்சி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஆலம்பூண்டியிலும், அனந்தபுரம் நகர நிர்வாகிகள் கூட்டம் அனந்தபுரத்திலும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago