முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஸப்த விழாக்களின் நிகழ்வாக 7 நாட்கள் தொடர்ந்து 7 விழாக்கள் நடைபெற்று வருகிறது நேற்று 5 ம் நாள் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் கல்லூரி தின விழா கல்லூரி நிறுவனர் பி. முனிரத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி செயலரும் திருவள்ளுவர் பல்கலைகழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான எம். இரமணன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் எம்.எச்.எஸ்.முகமது யாகூப் வரவேற்புரையாற்றினார். அரிமா ஆர்.சரவணன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். விழாவில் எழுத்தாளர்,பேச்சாளர் குறும்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.முடிவில் உதவி பேராசிரியை சுகுணா நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்