முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் 12,818 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை ரூ.42 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவி :அமைச்சர்கள் கே.சி.வீரமணி டாக்டர்.நீலோபர் கபில் வழங்கினர்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

 

தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அறிவித்த வறட்சி நிவாரணத் தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 12,818 விவசாய பெருமக்களுக்கு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டுவளர்ச்சித் துறை சார்பில் ரூ.42 கோடியே 86 இலட்சத்தி 50 ஆயிரம் நிதியுதவிகளை வங்கியில் நேரடியாக செலுத்தப்பட்டதற்கான ஆணையினை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் அவர்களும் வழங்கினார்கள்.மேலும் வேளாண்மைத் துறையின் சார்பில் 22 விவசாயிகளுக்கு ரூ.6,99,800ஃ-ம், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,90,000-ம், கூட்டுறவுத் துறையின் சார்பில் 521 பயனாளிகளுக்கு ரூ.1,24,44,000-ம், வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.3,96,000-ம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.65,000-ம், கல்வித்துறையின் சார்பில் 6 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மொத்தம் 589 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 37 இலட்சத்தி 29 ஆயிரத்தி 800- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆக மொத்தம் இன்று (07.03.2017) நடைபெற்ற விழாவில் 13,407 பயனாளிகளுக்கு ரூ.44 கோடியே 23 இலட்சத்து 79 ஆயிரம் 800ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் வழங்கினார்கள்.இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் வரவேற்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-மறைந்த தமிழக முதல்வர் அம்மா இந்திய வரலாற்றில் எங்கும் இல்லாத அளவிற்கு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்திற்காக நிதி ஒதுக்கி அதை தனி திட்டமாகவே நிறைவேற்றினார். நம்முடைய நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் தான் விவாசயிகள் வறட்சி காலங்களில் பாதிப்படைய கூடாது என்ற உயர்ந்த சிந்தனையால் மறைந்த தமிழக முதல்வர் அம்மா வறட்சி நிவாரண நிதிகளை வழங்க கடந்த ஆட்சியில் ஆணை பிறப்பித்தார்கள். தற்போது மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் தமிழக அரசு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை அறிவித்து அதனை தற்போது செயல்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் மாநில அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான வறட்சி நிவாரணமாக இறவை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500- ஆகவும், மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410ஃ- ஆக மொத்தம் ரூ.428.66 இலட்ச ரூபாய் வறட்சி நிவாரணமாக வேலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வேலூர் மாவட்டத்திற்கு வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்த வறட்சியால் பாதிக்கப்பட்ட 12,581 விவசாயிகளுக்கும், 228 தோட்டக்கலை விவசாயிகளுக்கும்,9 பட்டுவளர்ச்சி விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அரசு வழங்கும் இதுபோன்ற வறட்சி நிவாரண உதவிகளை பயன்படுத்தி சிறப்பாக விவசாயம் செய்ய வேண்டும். வருங்காலங்களில் விவசாயத்தொழில் நம்முடைய நாட்டில் முக்கிய பங்கு வகிக்கும். பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களை அனைத்துத் துறைகளிலும் கேட்டு தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எதிர்வரும் காலங்களில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளுக்குதான் சமுதாயத்தில் சிறப்பு முக்கியத்துவம் கிடைக்கும். எனவே விவசாயிகள் மனம் தளராமல் அரசு வழங்கும் உதவிளை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். தொடர்ந்து அம்மாவின் அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்