முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட நாட்கள் நிலுவையில் புதிய பட்டா மற்றும் பட்டா மாற்றம் குறித்து மனுக்கள் மீதான தீர்வுகளை மார்ச் மாதம் இறுதிக்குள் முடியுங்கள்: கலெக்டர் சி.அ.ராமன், உத்தரவு

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்களுக்கான மாவட்ட வருவாய் நிர்வாகத்துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூகபாதுகாப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான ஓய்வூதியங்கள் மற்றும் விபத்து நிவாரண நிதியுதவி வழங்கியது மற்றும் நிலுவையிலுள்ள விவரங்கள் குறித்தும், பொதுமக்கள் வழங்கிய முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், கலெக்டர் அவர்களிடம் வழங்கிய மனுக்கள், மனுநீதி நாட்களில் பெறப்படும் மனுக்கள், மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு உரிய பதில் மனு அனுப்பிய விவரம் மற்றும் மனுக்கள் நிலுவையையும், பொதுமக்கள் வருவாய் துறையிலிருந்து பல்வேறு சான்றிதழ்கள் கோரி அளித்த மனுக்களில் ஒரு மாதத்திற்க்கு மேல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதான காரணங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் உதவிதொகைகளின் நிலுவைகள் குறித்தும், சிறப்பு கவன திட்டங்கள் குறித்தும், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்காமல் நிலுவையிலுள்ள மனுக்கள் குறித்தும் துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.மேலும் மாவட்ட வழங்கல் துறையின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் குடும்ப அட்டைகள் விவரங்கள் குறித்தும், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களின் அந்தந்த வட்டங்களில் வசூல்செய்யப்பட வேண்டிய வரி வருவாய்கள் குறித்தும், அந்தந்த கோட்டங்களில் நிலுவையில் உள்ள அரசு திட்டப்பணிகளை முடித்திட அவற்றின் மீது நிலுவையில் உள்ள விசாரணை பணிகளை முடிப்பது குறித்தும், பொதுமக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியது மற்றும் வழங்காமல் உள்ள இழப்பீடு தொகைகள் குறித்தும், பல்வேறு சாலைப் பணிகள் மற்றும் மேம்பாலம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.தொடர்ந்து நில அளவைத் துறையின் மூலம் பொதுமக்கள் கோரிய பட்டா மாற்றம், புதிய பட்டா ஆகியவற்றின் மீதுள்ள நிலுவைகள் குறித்த மனுக்கள் அனைத்து வட்டங்களிலும் ஒரு மாதத்திற்கும் மேலாக அதிக நாட்கள் நிலுவையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனுக்கள் அளிப்பதால் ஒரே மனுவின் மீது தீர்வு கிடைக்க பதிவு செய்யப்படுகிறது. இதே போல கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களிடமும் நில அளவைகள் குறித்த மனுக்கள், பட்டா மாற்றம், புதிய பட்டா குறித்த மனுக்கள் அதிகளவில் நிலுவையில் இருந்து வருகிறது. டிசம்பர் 2016 வரை நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து விசாரணை செய்து அவற்றை இம்மாதம் மார்ச் 31-ற்குள் முடித்திட காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டாட்சியர்களும் வட்டாட்சியர்களும் சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு ஆய்வுகள் மேற்கொண்டு நிலுவையில் உள்ள பல்வேறு பணிகளை முடிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலர்களுக்கு மாதாந்திர பணி ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் சி.அ.ராமன், உத்தரவிட்டார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், சார் ஆட்சியர் திருப்பத்தூர் மரு.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாள் (பொது) (பொ) நாராயணன், வருவாய் கோட்டாட்சியர்கள் அஜய் சீனிவாசன், சரஸ்வதி, மற்றும் அனைத்து துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்