முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      நீலகிரி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

                    தேர்தல் நடத்தும் அலுவலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் 2017 தொடர்பாக வாக்குச்சாவடிகள் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி வரைவு பட்டியல்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும், அதேபோன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி வரைவு பட்டியல்களை சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வாட்டிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் 14.03.2017 அன்று விளம்பரப் படுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

                                  கருத்துக்களை தெரிவிக்கலாம்

எனவே பொதுமக்கள் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை அல்லது மறுப்புரைகளை தெரிவிக்க விரும்பும் பட்சத்தில் அதனை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ உரிய காலக்கெடுவிற்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago