முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      சேலம்
Image Unavailable

சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, தருமபுரியில் (17ஃ03ஃ2017) வெள்ளிகிழமையன்று கல்லூரி கலையரங்க கூடத்தில் தர்மபுரி ரோட்டரி மிட்-டவுன் மற்றும் சமூக பாதுகாப்புத்துறை ரூ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இக்கருத்தரங்கிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் கல்லூரியின் முதல்வர் அவர்கள் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜமீனாட்சி, பாதுகாப்பு அலுவலர் சரவணா, மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, பாதுகாப்பு அலுவலர் சுமதி மற்றும் லட்சுமணன் மிட்டவுன் ரோட்டரி கிளப் தலைவர், சுவn ஆனந்த் துணை ஆளுனா,; ஜோன்-8 மற்றும் சைல்டு லைன் ஒருங்கினைப்பாளர் கஸ்தூரி.குழந்தைகளுக்கான பாதுகாப்பு, கல்வியின் அவசியம், உரிமைகள் போன்ற தலைப்புகளில் உரையாற்றினர். பெண்களுக்கான சட்டங்கள், இளவயது திருமணச்சட்டம் பற்றிய விளக்கமும் இத்திருமணத்தால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகள் குறித்தும் உரையாடப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு பல்வேறு துறையை சார்ந்த மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கமானது தங்களது கல்விக்கும், வாழ்வியல் முறைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவிகள் கூறினர். குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போஸ்க் அவர்கள் இளஞ்சிறார் நீதிச்சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 சட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார். குழந்தைகள் பாதுகாப்பில் கல்லூரி மாணவிகளின் பங்கு பற்றிய கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இம்முகாம் சிறப்பாக நடைபெற கல்லூரி நிர்வாகத்தினர் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தனர். முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்