தி.மலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo07

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட் அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ம.சுகுமார் கூட்டத்திற்கு வருகை புரிந்த விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களையும் வரவேற்றார். விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொது கோரிக்கைகளை தெரிவித்தனர். விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பதில் அளித்தனர்.வறட்சி நிவாரணம் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பொது இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தனிநபர்கள் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் இருந்து சீமைக்கருவேல மரங்களை தங்கள் சொந்த செலவில் அகற்றுவதுடன் மீண்டும் அவை வளரா வண்ணம் புன்னை, பூவரசு போன்ற மரங்களை நட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தெரிவித்தார். மேலும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: