எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெய்யலின் தாக்கத்தை அறிந்து மக்கள் குடிப்பதற்காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் பகுதிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தியாகதுருகத்தில் பேருந்து நிலையத்தின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி.மணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான்பாஷா, மாவட்ட மீனவரணி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் .ராஜவேலு முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளரும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினருமான குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு, க.காமராஜ் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பந்தலில் வைத்திருந்த தண்ணீர், நீர்மோர், கம்பங்கூழ், இளநீர், தர்பூசனி உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ஒன்றிய பாசரைத் தலைவர் பரியாஸ், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குமரவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நீலாவதி கதிர்வேல், மணிவேல், சுப்புமகாலிங்கம், முன்னாள் கவுன்சிலர் முனியம்மாள் சின்னக்கன்னு, அண்ணா தொழிற் சங்க செயலாளர்ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதே போல் கள்ளக்குறிச்சி சேலம் சென்னை நெடுஞ்சாலையி் நான்கு முனை சந்திப்பில் நகர செயலாளர் பாபு தலைமையில் தண்ணீர் பந்தல் ஏறாபாடு செய்து வைத்திருந்தனர். அதனை மாவட்ட செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு, காமராஜ் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பந்தலில் வைத்திருந்த தண்ணீர், நீர்மோர், தர்பூசனி, ஆரஞ்சுபழம் உள்ளிட்டவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ அழகுவேலு பாபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், முன்னாள் நகர் மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட வழக்குறிஞர் பிரிவு செயலாளர் .சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் குபேந்திரன் மற்றும் முன்னாள் நகர கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதே போல் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு, காமராஜ் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பந்தலில் வைத்திருந்த தண்ணீர், நீர்மோர், தர்பூசனி, உள்ளிட்டவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் சின்னசேலம் ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன், ஆவின் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025