மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      சென்னை

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; நடைபெற்றது.

கோரிக்கை மனு

 


இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 78 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 96 மனுக்களும், சமூக நலத்திட்டம் 9 மனுக்களும், குடும்ப அட்டை 5 மனுவும், ஆதிதிராவிடர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலம் 9 மனுவும், வேலைவாய்ப்பு 24 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு 7 மனுக்களும், ஊரக ஃ நகர்புற வளர்ச்சி 24 மனுக்களும், கடனுதவி 3 மனுக்களும், அடிப்படை தேவை ஃ போக்குவரத்து ஃ சுகாதாரம் 2 மனுக்களும், வேளாண்மை ஃ கால்நடைத்துறை ஃ மீன்வளம் 12 மனுக்களும், இதரதுறை 71 மனுக்களும், பேரிடர் 27 மனுக்களும், சான்றிதழ் 14 மனுக்களும், சான்றிதழ் நகல் 1 மனுவும்;, கல்வி 6 மனுவும், உழவர் பாதுகாப்பு திட்டம் 1 மனுவும் என மொத்தம் 389 மனுக்கள் பெறப்பட்டது.

 

இம்மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும், பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இக்கூட்டத்தில் மீன்வளத்துறை சார்பாக விபத்தில் உயிரிழந்த 3 மீனவர் குடும்பங்களுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் உதவி மற்றும் நலிவுற்றோர் ஆதார நிதியாக 23 சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கமல் கிஷோர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொ) முத்துசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்;மையினர் நல அலுவலர் சர்மிலி, மாவட்ட வழங்கல் அலுவலர் வ. சந்தியா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: