முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூவிருந்தவல்லி நகராட்சி பகுதியில் குடிநீர் முறைகேட்டில்; ஈடுபட்ட 10 மின் மோட்டார்கள் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      சென்னை

பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட, வீடுகளில் குடிநீர் முறைகேட்டில் ஈடுபட்ட 10 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது.பூவிருந்தவல்லி நகராட்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 46.20 லட்சம் விட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

குடிநீர் திருட்டு

பூவிருந்தவல்லி நகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருட்டு நடப்பதாக மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி அவர்களுக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்; உத்தரவின்பேரில் பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் சித்ரா தலைமையில் நகராட்சிக்குட்பட்ட அம்பாள் நகர், பொன்னியம்மன் நகர், அம்பேத்கார் நகர், சத்யா நகர், அம்மா நகர் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் திருடப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் திருடுவது கண்டுபி;டிக்கப்பட்டு 10 மோட்டார்கள் அறிமுகம் செய்யப்பட்டது, அத்துடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த ஆய்வு நகராட்சி முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் முத்துகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்