முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தண்ணீர் தினத்தையொட்டி விழ்ப்புணர்வை வலியுறுத்தி பேரணி கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைகட்டு அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை யொட்டி, தண்ணீரின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புர்ணவு பேரணியை கலெக்டர் சி.கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து பெரியமுத்தூர் கூட்டு ரோடு வழியாக துவாரகாபுரி வரையில் பேரணியானது நிறைவு பெற்றது. இதில் 250- ம் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். முன்னதாக தண்ணீரின் சிக்கனத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது. ‘தண்ணீரின் சிக்கனத்தையும் அதன் அவசியத்தையும், பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த இனி பாடுபடுவேன், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் விற்பனையாகும் தண்ணீர் வாங்குவதை தவிர்ப்பேன், நீர் நிலைகளைப் பாதகாத்து பல்வேறு வழிகளில் தண்ணீர் மாசுபடுவதையும், சுற்றுசுழல் கெடுவதையும், இனி அனுமதியேன், மழைநீர் சேமிப்பு முறையினை உடனே தொடங்குவேன். பயன்படுத்தும் நீரையும், மின்சாரத்தையும், குறைத்து பல வழிகளில் புகையின் அளவை குறைத்து பிளாஸ்டிக்கை அறவே நீக்கி அதிக மரங்களை நட்டு புவி வெப்பமடைவதைக்கு குறைப்பேன். தண்ணீர் மன்றத்தின் மூலம் மாற்றும் மேலாண்மையைச் சொல்லி நானும் மாறி அதிக எண்ணிக்கையில் மக்களையும் மாற்றி இந்த புவியை மீண்டும் பசுமையாக்க அயராது பாடுபடுவேண். மாற்றும் மேலாண்மை வழிகளை பின்பற்றி நீர் மற்றும் உணவு எப்போதும் அனைவருக்கும் கிடைக்க அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன்" என பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ( நீர் வள ஆதாரம்) சம்ராஜ், பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மோகனசுந்தரம், மற்றும் பள்ளி ஆசியரிய ஆசிரியர்கள் கலந்தக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்