விருத்தாச்சலம் சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

புதன்கிழமை, 22 மார்ச் 2017      கடலூர்
Mar 22-a

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.           கலெக்டர்  விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,                 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிடங்கினுடைய உட்பகுதியின் நிலையையும், கதவுகள் சரியாக உள்ளனவா என்பதையும், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த அறிக்கை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) காந்தி, விருத்தாச்சலம் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: