பர்கூர் ஒன்றியத்தில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட இடங்கள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
3

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தில், குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சி.கதிரவன்  தலைமையில்நேற்று ( 25.03.2017 ) நடைபெற்றது. தொடர்ந்து பாலிநாயனபள்ளி ஊராட்சியில்  ஆழ்துழை கிணறு பணிகளையும், அஞ்சூர் ஊராட்சி நக்கல்பட்டி, காட்டகரம் ஊராட்சி கங்காவரம், வேடர்தட்டக்கல், பெலவர்த்தி ஊராட்சி தின்னூர், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி சித்தகம்பள்ளி, கெட்டுர், மஜித்கொல்லஅள்ளி, மல்லப்பாடி, ஒரப்பம் ஊராட்சி சுண்டம்பட்டி, பாலேப்பள்ளி ஊராட்சியில்  அங்கன்வாடிமையம் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு  குடிநீர் வழங்கும் பணிகளையும், வெண்ணப்பள்ளி ஊராட்சி, பெருகோப்பனப்பள்ளி ஊராட்சி, சூளாமலை, வெப்பாலம்பட்டி, சின்னமட்டாரபள்ளி, ஜெகதேவி, குள்ளம்பட்டி, ஒப்பதவாடி, வலசகவுண்டனூர்  ஊராட்சிகளில்  ஓகேனக்கல்  கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பைன்லைன்அமைத்தல், புதிய ஆழ்துழை கிணறு அமைத்தல், புதிய பைன் லைன் அமைத்தல், சிறு மின்விசை மோட்டார் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் குறித்து  ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், ஒன்றிய பொறியாளர்களுடன்  குடிநீர் வினியோகம் திட்ட பணிகள் குறித்த ஆய்வு செய்தார். தொடர்ந்து  கலெக்டர்  பர்கூர் பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளையும், கொண்டப்பநாயகனப்பள்ளி ஊராட்சியில் புதிய பைப்லைன் அமைக்கும் பணிகளையும், ஜெகதேவி ஊராட்சி பாகிமானூர் ஊராட்சியில் தரை மட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்பு ஜகொத்தப்பள்ளி ஊராட்சியில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய பைப்லைன் அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ,  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் குடிநீர் திட்ட பணிகளை நேரடியாக பார்வையிட்டு எவ்வித இடையூறுமின்றி பணிகளை வேகமாக முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது  ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய  உதவிசெயற்பொறியாளர்கள்;  சேகர், சாந்தி, ஒன்றிய பொறியாளர்கள் கோவிந்தராஜ், சுரேஷ், ஜெகதீஸ்குமார், பேரூராட்சி உதவி பொறியாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஆணையாளர் சையத்பயாஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: