நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் பி.தங்கமணி துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      நாமக்கல்
11

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதி, பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பாக மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் பள்ளிபாளையம் - சங்ககிரி சாலையில் உள்ள பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று (25.03.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமை வகித்தார்.    இந்நிகழ்ச்சியில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி  கலந்து கொண்டு கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார்.இப்பேரணியானது பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பாக தொடங்கி பேருந்து நிறுத்தம், திருச்செங்கோடு சாலை வழியாக மீண்டும் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது. இப்பேரணியில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை மாணவ, மாணவியர்கள் ஏந்திச் சென்றனர். மேலும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பேரணியில் குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்சினி, உதவி இயக்குநர் (கலால்) புகழேந்தி, சேலம் -நாமக்கல் மாவட்ட ஆவின் ஒருங்கிணைந்த தலைவர் ஆர்.சின்னுசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ்.தலைவர் பி.என்.கந்தசாமி, பள்ளிபாளையம்  முன்னால் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம்  முன்னால் நகர்மன்றத்தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: