முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் விநியோக திட்டப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.செஞ்சி பேரூராட்சி கொத்தமங்கலம் சாலை சிறுகடுப்ப+ர் பகுதியிலிருந்து வார்டு 1-ல் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணற்றில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில், குடிநீர் பம்பு குழாய், நீருந்துநிலையம் ஆகியவை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். மற்றும் வார்டு 1-ல் புதியதாக அமைக்கப்பட்ட கைப்பம்பினை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.செஞ்சி ஊராட்சி ஒன்றியம் ஆலம்ப+ண்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றினை ஆய்வு செய்தார். மற்றும் ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியினை சுத்தமாகவும், தண்ணீரை வீணாக்கமலும் பராமரிக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவருக்கு அறிவுறுத்தினார்.செஞ்சி ஊராட்சி ஒன்றியம் மேலந்தாங்கல் கிராமத்தில் மாநில பேரிடர் பொறுப்பு நிதி 2016-17 திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளிக் கிணறு ஆழப்படுத்துதல் பணிகளை மேற்பார்வையிட்டார். இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்தார். மேலும், ஊரகப் பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக் குறையை போக்கவும், குடிநீர் பிரச்சனைகள் பெரிய அளவில் ஏற்படாமல் ஆரம்ப நிலையிலேயே தவிர்திடவும், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் மின் மோட்டார் பழுது, குடிநீர் குழாய் பழுது, நீர்மட்டம் கீழே செல்வது, மின் இணைப்புகள் பழுது போன்ற பழுதுகளின் விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து பழுது நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அனைவருக்கும் தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டியுள்ளதால், தனி நபர்கள் எவரேனும் மோட்டார் வைத்து பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுதல், தோட்டப் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், பள்ளங்கள் தோண்டி தண்ணீர் பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். குடிநீர் பற்றாக்குறையை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் இதில் தனி கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இவ்வாய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.இரவிச்சந்திரன், ரோஷன், செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் சோமசுந்தரம், ஆனந்தி, இளநிலை பொறியாளர்கள் தனசேகரன், ஜெயபிரகாஷ், செஞ்சி பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், செஞ்சி பேரூராட்சி இளநிலை செயற்பொறியாளர் அருள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்