முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் குடிமராமத்து பணிகள் : கலெக்டர் கோவிந்தராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து சிந்தலவாடியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு கரூர் மாவட்டத்தில் ரூ.125.70 இலட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், கிரு~;ணராயபுரம் ஒன்றியம், வயலூர் ஊராட்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று செயல்படுத்தும் குடிமராமத்து பணிகளை செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

 

செய்தியாளர் பயணம்

 

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்திலுள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியினை எதிர்கொள்ளவும் மழைநீரை திறம்பட சேமித்திடவும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த (23.02.2017) அன்று குடிமராமத்து பணிகளை 30 மாவட்டங்களில் செயல்படுத்தி ரூ.100 கோடி செலவில் 1519 பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில், கிரு~;ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் சிந்தலவாடி கிளை வாய்க்கால் 3 கி.மீ தூரத்திற்கு தூர் வாரி புனரமைத்து கம்மநல்லூர், மகாதானபுரம், சிந்தலவாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 362.14 ஏக்கர் நிலப்பரப்பு பயனடையம் வகையில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் மூலம் வரப்படும் வரத்துவாரிகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வார ரூ.40 இலட்சம் மதிப்பில் 11 பணிகளும், அமராவதி ஆற்றின் பாசன வாய்க்கால்கள் ரூ.25.70 இலட்சம் மதிப்பில் 6 பணிகளும், நொய்யல் ஆற்றின் மூலம் ரூ.35 இலட்சம் மதிப்பில் 4 பணிகளும், அரியாறு ஆற்றின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் 3 பணிகளும் என மொத்தம் ரூ.125.70 இலட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் ஆணைக்கிணங்க மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய கருவேல் மரங்கள் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவும், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில், வீரராக்கியம், வெள்ளியணை, உப்பிடமங்கலம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட ஏரிகள் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்திற்கு உதவிடும் என்ற அடிப்படையில் வங்கிகள், ஆலைகள், பொதுநிறுவனங்கள் ஆகியவற்றுடன் பங்களிப்புடன் இந்த நீர் ஆதார அமைப்புகளில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி எதிர்வரும் மழைக்காலங்களில் நீர் சேகரிப்பு செய்திடும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு ஏதுவாக 8 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.8 கோடி மதிப்பில் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகள்; ஆழப்படுத்தியும், பகிர்மானக்குழாய், நீரேற்றுக்குழாய் நீர் சேகரிப்பு தொட்டி, மின்மோட்டார்கள் உள்ளிட்டவைகளை புனரமைத்தும், நிலத்தடி நீர் செறிவாக கிடைக்கும் பகுதிகளில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மிகுந்த பங்களிப்புடன் ஆர்வமுடன் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வயலூர் ஊராட்சியில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் பயன்தரக்கூடிய குடிமராமத்து பணிகளில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை காத்திட ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். மேலும், மாறி வரும் பருவச்சூழலில் வறட்சியை எதிர்கொள்ளத்தக்க வகையில் தமிழக அரசு இந்த குடிமராமத்து பணிகளை வழங்கி குடிமக்களை காத்து வருகிறது. இதற்காக கரூர் மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) துரைராஜ், முன்னோடி விவசாயி கோபால தேசிகன், தொண்டு நிறுவன இயக்குநர்கள் நாராயணன் (கிராமியம்), குட்டிமணி (வனம்செய்), வட்டாட்சியர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்