முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம் போலியோ சொட்டு மருந்து 1581 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 3.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கு கண்டிப்பாக சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரின் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதராம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையுடன் ரோட்டரி கிளப் இணைந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்தினை மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   வழங்கியதுடன் முகாமை துவக்கி வைத்து தெரிவிக்கையில்.

          தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் 02.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு ஏதுவாக அரசு தலைமை மருத்துவமனை, தாய் சேய் நல விடுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள், மற்றும் பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள் என 34 மையங்கள் செயல்படுவதுடன் 20 நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. அனைத்து முகாம்களிலும் போதிய அளவு போலியோ சொட்டு மருந்து தயார் நிலையில் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களிலிருந்து பணி நிமிர்த்தமாக இடம்பெயர்ந்து வசிக்கின்ற குடும்பங்களை சேர்ந்த 1357 குழந்தைகளுக்கும் சிறப்பு முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து உத்திரவிடப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது பாதுகாப்பானது உலா சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரபெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது. இது நோய் தாக்குதலிருந்து குழந்தைகளை பாதுகாக்கக் கூடிய முக்கியமான மருந்தாக திகழக்கூடிய ஒன்றாகும். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொது சுகாதாரத்துறையுடன் அங்கன்வாடி பணியாளர்கள், பிறதுறை பணியாளர்கள் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என 6324 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். திட்டமிட்டப்படி 3.33 லட்சம் குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும் விதமாகவும் ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கும் மேலும் முன்பு எத்தனை முறை சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் தற்பொழுது நடைபெறுகின்ற இரண்டு முகாம்களிலும் பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொண்டு தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்தக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன்   தெரிவித்தார். 

                இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.எட்வின்ஜோ, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பானுமதி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் மரு.சுகந்தி, மரு.மனோண்மணி, மரு.பூமா, மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்