முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது அறிவு மற்றும் பண்பாட்டுத் தேர்வுகளில் கோபி ஸ்ரீவித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

பொது அறிவு மற்றும் பண்பாட்டுத் தேர்வுகளில் கோபி ஸ்ரீவித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி, திருப்பறாய்த்துரையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் சுவாமி சித்பவானந்தர் ஜெயந்தி நடைபெற்றது.  அவ்விழாவினை ஒட்டி பண்பாட்டுத் தேர்வு மாநில அளவில்  நடத்தப்பட்டது. இத் தேர்வில் மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமானவர்கள் தேர்வு எழுதினர். இத் தேர்வில் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீவித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளியைச் சார்ந்த 6 வகுப்பு பிரிவில் மாணவி ராஜஸ்ரீ முதலிடத்தினையும், மாணவர் அதுல்யஜ் இரண்டாமிடமும், மாணவர் சபரி மூன்றாமிடத்தையம் பெற்றளனர்.  8ம் வகுப்பு பிரிவில் அழகு துவாரகா முதலிடமும், அனுசுயா இரண்டாமிடமும், கவினா மூன்றாமிடமும் பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் கைக் கடிகாரம், புததகம் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

ஈரோடு எக்ஸல் ஜேசீஸ் பதிப்பகம் மற்றும் வேதா அகாடமி இணைத்து நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொது அறிவுத் தேர்வில் கோபி ஸ்ரீவித்யாலயா பள்ளியைச் சார்ந்த 11ம் வகுப்பு மாணவி  காருண்யா மாநில அளவில் இரண்டாமிடத்தையும், மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர்.ஸ்ரீதர், செயலர் கோதை ஸ்ரீதர், பொருளாளர் கீதா ரவீந்திரன், நிர்வாகிககள் டாக்டர்.ரவீந்திரன், டாக்டர். விஷ்ணு செந்தூரன் ஆகியோர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்