கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
1

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதி ஆதார திட்டத்தின் கீழ் 21 - குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொகையாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். உலக ஆடிசம் தினத்தையொட்டி விழிப்புணர்வு அட்டையை கலெக்டர் அவர்கள் வெளியிட்டார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்;பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 220- மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 - மனுக்களும் ஆக மொத்தம் 228 - மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் உலக புற சிந்தனை அற்றவர்கள் விழிப்புணர்வு தினத்தையொட்டி ஆடிசம் விழிப்புணர்வு குறித்து அட்டைகளை கலெக்டர் வெளியிட்டார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட (ஐஊPளு) நிதி ஆதரவானது துன்புறும் சூழல்களில் உள்ள குழந்தைகள், கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் என பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 41 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 என்ற அடிப்படையில் 10 மாதங்களுக்கு ரூ.20,000- வீதம் என ஒவ்வொரு குழந்தைக்கும் மொத்தம் ரூ.8,20,000- (ரூபாய் எட்டு லட்சத்து இருபது ஆயிரம்;) காசோலைகளை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எச்.ரகமதுல்லா கான், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொ) த.சாந்தி, உதவி ஆணையர் ( ஆயம்) முருகேசன், துணை இயக்குநர் ( சுகாதாரபணிகள்) மரு.பிரியா ராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் வி.தேவிபிரியா,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் வீ.சிவசங்கரன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: