இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் சதி : தம்பிதுரை குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      அரசியல்
Thambidurai(N)

புதுடெல்லி  - இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக  மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை புகார் தெரிவி்த்துள்ளார்.  டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை தம்பிதுரை  சந்தித்து, ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் அணியினர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிப்பதற்காகவே பல சதித்திட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு கட்சியின் மூன்றில் ஒரு பகுதியினர் பிரிந்து சென்றால்தான் பிளவு ஏற்பட்டதாக அர்த்தம்.

ஆனால் தேர்தல் ஆணையத்தில் பல தவறானத் தகவல்களை அளித்து இரட்டை இலை சின்னத்தை முடக்கினார்கள். இதன் பின்னணியில் சதி இருப்பதாக கருதுகிறோம். இரட்டை இலை எங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சதியை மின்விளக்கு சின்னம் பெற்றவர்கள் செய்துள்ளனர். சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இரட்டை இலை சின்னம் எங்களுடையது தான். விரைவில் இச்சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு தந்து விடும் என்றார். எங்கள் அணியினர் பணம் பட்டுவாடா செய்வதாக உள்நோக் கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள் ளது. ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந் தால் ஓ.பி.எஸ் தான் அதற்கு காரணம். ஏனெனில் அவர்தான் அப்போது முதல்வராக இருந்தார்.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களைச் செய்திருப்பதால் எங்கள் வேட்பாளர் டிடிவி தினகரன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தி.மு.க.வும் அதற்கு துணை போகும் ஓ.பி.எஸ் அணியும் ஆர்.கே.நகரில் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: