கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருராட்சி, ஒன்றியத்தை சேர்ந்த பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் ஊத்தங்கரை ஒன்றியத்தை சேர்ந்த கொண்டம்பட்டி, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை, நடுப்பட்டி, மூங்கிலேரி, வெங்கடதாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முன்னதாக ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட வண்டிகாரன் கொட்டாய் பகுதியில் உள்ள திறந்த வெளி கிணற்றில் ரூ. 1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளையும், பாம்பாறு அணை பகுதியில் ஆற்று படுகையில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்கனவே உள்ள தரை மட்ட கிணற்றை மேலும் தூர் வாரி ஆழத்திடவும் பேரூராட்சி பொறியாளர்களுக்கு உத்திரவிட்டார்.தொடர்ந்து மிட்டபள்ளி ஊராட்சியில் திறந்த வெளிகிணற்றில் உள்ள தண்ணீரை வெளிறே;றி தூர் வாரவும், சின்னதள்ளபாடி ஊராட்சி துடபட்டான் ஏரி பகுதியில் புதியதாக தோண்டப்பட்டு வரும் குடிநீர் திறந்த வெளி கிணறு பணிகளையும், நேரில் பார்வையிட்ட கலெக்டர் அவர்கள் கூடுதலாக இரண்டு கிரைண் மூலம் பணிகளை விரைவு படுத்தி முடித்திட வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து கீழ் மத்தூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பெரியபணந்தோப்பு பகுதியில் உள்ள பள்ளி அருகே உள்ள ஆழ்துழை கிணற்றில் நீர் வரத்து குறைவாக உள்ளதாகவும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக கலெக்டர் அவர்களிடம் நேரில் தெரிவித்ததையடுத்து உடனடி நடவடிக்கையாக ஏற்கனவே உள்ள ஆழ் துளை கிணற்றை ஆய்வு செய்து தூர்வாரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து சிங்காரப்பேட்டை ஏரியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் குடிநீர் திறந்த வெளி கிணறு தோண்டும் பணிகளையும், தீர்த்தகிரி வலசை ஏரிபகுதியில் புதிய திறந்த வெளி கிணறு அமைக்கப்படவுள்ள இடத்தையும், வெள்ளக்குட்டை ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் திறந்த வெளிகிணற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஏற்கனவே உள்ள திறந்த வெளி கிணற்றை தூர்வாரி குடிநீர் வினியோகம் செய்ய ஒன்றிய பொறியாளர்களுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது பேரூராட்சி உதவி இயக்குநர் .மரியஎல்சி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் நடேசன், உதவி பொறியாளர் ராஜேந்திரன், ஊத்தங்கரை செயல் அலுவலர் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ( ஊரக வளர்ச்சி) சேகர், ஒன்றிய ஆணையாளர்கள் வேடியப்பன், ராஜீ, உதவி பொறியாளர் .இலக்கியா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: