முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தண்ணீர் தண்ணீர் புதிய இயக்கம் பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் தண்ணீர் எனும் புதிய இயக்கத்தை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிபபில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. வறட்சியால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கவும் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 21.28 கோடி மதிப்பில் 1037 திட்டப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் கால்நடை தீவனக்கிடங்குகள் திறக்கப்பட்டு, உலர்தீவணம் வழங்கப்படுகிறது. சொர்க்கம் எனும் சாகுபடி திட்டத்தின்கீழ் 600 ஏக்கர் நிலத்தில் கால்நடை தீவன பயிர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் மூலம் வறட்சியால் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும். தற்போது மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. சில இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 900 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமாக, அதி தீவிரமாக நிலத்தடி நீர சுரண்டப்படும் நிலை உள்ளது. எந்த ஒன்றியத்திலும் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பான அளவில் இல்லை. எனவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தண்ணீர் தண்ணீர் என்ற இயக்கத்தை துவக்கி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகியவற்றின் தொழில்நுட்ப குழுக்கள் இதற்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் சிறு கற்பாறைகளை கொண்டு கேபியான் தடுப்பணைகளும், செறிவூட்டு குழிகளும் அமைக்கப்படவுள்ளன. இதுவரை 1031 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 42 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு நிதி மூலம் பல்வேறு இடங்களில் மழை நீர் சேமிப்பு பணிகள், 500 கி.மீ. நீளத்துக்கு பல்வேறு இடங்களில் வாய்கால்கள் சீரமைப்பு, கிரிவலப் பாதையை அமைந்துள்ள 16 குளங்களை 100 நாள் வேலை திட்டத்தில் சீரமைத்தல், 200 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி, பண்மை குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகிறது. கிராம ஊராட்சிகளில் 6107 முறையற்ற குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டு, 60 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 200 ஹெக்டேர் பரப்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்த பங்களிப்பு நிதியின் மூலம் நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாடு அல்லது வறட்சி நிவாரண பணிகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்