முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேக்கம்பட்டி ஊராட்சியில் 130.46 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

தேக்கம்பட்டி ஊராட்சியில் 130.46 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது

காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.130.46 கோடி மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது…..

பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கோவை மாவட்டத்ததைச் சார்ந்த தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி, தென்கரை, வேடபட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் பேரூராடசிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 134 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.130.46 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்ப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட 7 பேரூராட்சிகளின் (2014) மக்கட்தொகை 71,800 இடைக்கால மக்கட்தொகை (2029) 83,400 மற்றும் உச்சகட்ட மக்கட்தொகை (2044) 96,000 என கணக்கிடப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் விகிதாசாரத்திலும் மற்றும் 134 ஊரக குடியிருப்புகளுக்கு (2014) மக்கட்தொகை 72,463 இடைக்கால மக்கட்தொகை (2029) 79,718 மற்றும் உச்சகட்ட மக்கட்தொகை (2044) 86,964 என கணக்கிடப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் மொத்தம் நாளொன்றுக்கு இடைக்கால தேவையான 11.95-அனை மற்றும் உச்சகட்ட தேவையான 13.81 அனை-ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பத்திரகாளியம்மன் கோயில் அருகே செல்லும் பவானி ஆற்றை ஆதாராமாக கொண்டு பவானி ஆற்றில் 3.0மீட்டர் விட்டம் உள்ள நீர் புகு கிணறு   (iவெயமந றநடட)  மற்றும் 6.0 விட்டமுள்ள நீர் சேமிப்பு கிணற்றோடு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு 500மி.மீ விட்டமுள்ள னுஐ குழாய்கள் மூலம் 12.19கி.மீ தூரத்திற்கு குருந்தமலை கோவில் அருகில் அமைக்கப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 500மி.மீ விட்டமுள்ள னுஐ நீருந்து குழாய்கள் மூலம் வீரபாண்டி அருகிலுள்ள நீருந்து நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து நீருந்து குழாய்கள் வழியோரத்திலுள்ள வேடபட்டி, தாளியூர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு தேவையான அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளும் 134 ஊரக குடியிருப்புக்கான குடிநீர் தனிதனியாக அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியிலும் மற்றும் மீதமுள்ள தென்கரை, ஆலந்துறை மற்றும் பூலுவப்பட்டி பேரூராட்சிகளுக்கு தேவையான குடிநீர் தண்ணீர் பந்தலில் அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பேரூராட்சிகளில் தனித்தனியாக அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இத்திட்டத்தில் பிரதான குழாய்கள் மற்றும் துணை பிரதான குழாய்கள் 221.14 கி.மீ நீளத்திற்கும் பகிர்மான குழாய்கள் 149.4 கி.மீ நீளத்திற்கும் பதித்து 39 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.  இத்திட்டத்தில் 75மூ பணிகள்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ஜீன் - 2017ல் முடித்து பொதுமக்கள் பயனுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என  மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தெரிவித்தார்.

இவ்வாய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூபன் சங்கர் ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பாஸ்கரன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், மற்றும அரசு அலுவலாகள் பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்