விழுப்புரம் மாவட்டத்தில் சீமை கருவேலமரம் இல்லாத வடவானூர் கிராமம்: நீதிபதிகள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முறையாக சீமைகருவேலமரம் முற்றிலுமாக அகற்றப்பட்ட கிராமமாக செஞ்சி வட்டம் வடவானூர் கிராமத்தை நீதிபதிகள் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.சீமை கருவேலமரங்களை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவு அளித்துள்ளது. மேலும் இதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது. இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், உள்ளாட்சி நிர்வாகவும் சீமை கருவேலமரங்களை அப்புறபடுத்தி வருகின்றன. இந்நிலையில் செஞ்சி தாலுக்கா வடவானூர் கிராமத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை கிராமக்களும் மற்றும் செஞ்சி வழக்குரைஞர்களின் வழிகாட்டுதலின்பேரில் 15 நாட்களில் அக் கிராமத்தில் உள்ள சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்டன. மாவட்ட உரிமையியல் நீதி மன்ற நீதிபதி வெங்கடேசன் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுதா ஆகியோர் வடவானூர் கிராமத்தை சுற்றி பார்த்தனர். பின்னர் சீமைகருவேலமரங்களை முழுமையாக அகற்றப்பட்டதற்கு கிராம மக்களை பாராட்டினர். இது குறித்து நீதிபதி வெங்கடேசன் பொது மக்களிடம் கூறுகையில் இந்த மரங்கள்மீண்டும் முளைக்காமல் பார்த்துகொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும். மேலும் இந்த  கிராமத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அக்கன்றுகளை வழக்குரைஞர்கள் உங்களுக்கு வழங்குவார்கள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை வழக்குரைஞர் சங்க தலைவர் கண்ணதாசன் செய்திருந்தார். வழக்குரைஞர்கள் தேவகுமார், கே.கதிரவன், சக்திராஜன், ஜி.கிருஷ்ணன், தொண்டூர் சுப்பிரமணி, கொடம்பாடி சுப்பிரமணி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: