முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்த கையேடு: அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்த கையேட்டினை கே.பி. அன்பழகன் அவர்கள் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், உடனிருந்தார்.பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :- தருமபுரி மாவட்டத்தில் ஏற்படும் நிகழ்வுகள், புகார்கள் குறித்து பொதுமக்கள் கீழ்க்கண்ட இலவச தொலைபேசி வசதிகளை பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாடு, குழந்தை திருமணம், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பேருந்து வசதிகள் குறித்து பல்வேறு இனங்கள் சார்பாக புகார்களை தெரிவிக்கலாம். மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 1077, 1800 425 1071, 1800 425 7016 மற்றும் வாட்ஸ்அப் எண் 8903891077 இந்த தொலைபேசி அழைப்புகளுக்கு ஏற்றவாறு அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் விநியோகத்தை சீர்குலைப்பவர்கள், மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள், பைப்லைனை சேதப்படுத்துபவர்கள் மீது தமிழ்நாடு பொது சொத்து சேதாரம் (வுNPPனு) குறித்த சட்டத்தின்கீழ் காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறை குறித்த செயல்பாட்டினை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள், மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன்,இ பார்வையிட்டனர். இந்த ஆய்வீன் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்சரவணன், பாலக்கோடு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், வட்டாட்சியர் விஜயா, புகார் கட்டுப்பாட்டு அறை அலுவலர் சிலம்பரசன் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்