முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான உலக நுகர்வோர் தினம்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான உலக நுகர்வோர் தினம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான உலக நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  அப்போது அவர் பேசியதாவது:-  தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.  மேலும் தற்போது பொதுவிநியோகத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்திடும் வகையில் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றி வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 53,000 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்று சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 
 அதை போல நுகர்வோர் மற்றும் பயனீட்டாளர்கள் தரமான மற்றும் நியாயமான பொருட்களை பெற்று பயனடைவதில் நுகர்வோர்களின் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக நுகர்வோர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களின் சரியான எடையளவு, தரம், உற்பத்தி நாள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது நுகர்வோரின் உரிமையாகும்.  கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறையின் மூலமாகவும், எடையளவு, எடைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தொழிலாளர் துறையின் மூலமாகவும் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.
 நுகர்வோர்களின் குறைகளுக்கு தீர்;வு காணும் விதமாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  நுகர்வோர் பாதிக்கப்படும் வகையில் விற்கும் பொருள் எடையளவு குறைவாக இருந்தாலும், முத்திரையிடப்படாமல்  தரமின்றி இருந்தாலும் , காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காணலாம்.  மேலும் மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் மாணவர் நுகர்வோர் மன்றங்கள், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கங்களை ஊக்கப்படுத்திடும் வகையில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.  எனவே பொதுமக்கள் தங்கள் அன்றாடம் வாங்கும் பொருட்களின் தரம் அறிந்து வாங்கி பயன்படுத்துவது ஒவ்வொரு நுகர்வோரின் உரிமையாகும்.  பொதுவிநியோகத் திட்டம், குடும்ப அட்டைகள், வெளிச் சந்தைகளில் வாங்கும் பொருட்கள், சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து மாநில நுகர்வோர் சேவை மையத்தினை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
 முன்னதாக மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி, தொழிலாளர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள சட்டமுறை எடையளவு கையாளுதல் திட்டத்தின் கைபேசி செயலி குறித்த முத்திரையினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.மதியழகன், மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் ஜே.காளிதாஸ், மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.ஜே.சுபாஸ்சந்திரபோஷ், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் பத்மகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.ஜெய்சங்கர், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர்கள் நா.பிரேம் சதீஸ், ஆர்.சகாயம், கோ.அரவிந்தன், லதா, வி.துரைப்பாண்டியன், எம்.ஏ.கரீம்கனி, கே.ஆர்.என்.மணிமாறன், மு.செய்யது இபுராஹீம், என்.ஜான் போஸ், ஏ.சுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) மா.சாந்தி, முகம்மது சதக் தஸ்தகீர் பள்ளியின் முதல்வர் எஸ்.நந்தகோபால்  உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்