முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல்இ வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா மாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகைஇ காவல்துறை பாதுகாப்புஇ மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 414 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வேலூர் சேண்பாக்கம் பாறைமேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் விழுப்புரம் மாவட்டம் ஈ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்ததிற்காக அவரது மனைவி தீபா என்பவருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் சி.அ.ராமன்,வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago