முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      திருவாரூர்

திருவாரூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள வார்டுகளில் 2017-2018 ஆண்டிற்கான பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைப்பெற்று வருகிறது.

கணக்கெடுப்பு

திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 154 கிராமப்புற குடியிருப்பு பகுதிகள் மற்றும் 30 நகர வார்டுகளில் கணக்கெடுப்பு பணி 17.4.2017 முதல் 21.05.2017 முடிய மேற்கொள்ளப்படஇருக்கிறது. இக்கணக்கெடுப்பில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் இடம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் கண்டறிந்து முறையான பள்ளியில் சேர்த்தல் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு அதற்கான மையங்களில் சேர்க்கவும் அரசின் நலத்திட்டங்கள் குழந்தைகளுக்கு சென்றடைய தேவையான ஆலோசனைகளையும், வழிக்காட்டுதலும் வழங்கப்படும். இக்களப்பணியில் ஆசிரியப்பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக இக்களப்பணியை திருவாரூர் வட்டம் கூடுர் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட மொசக்குளம் மற்றும் களக்குடி பகுதியில் திருவாருர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட உதவித்திட்ட அலுவலர் ஆர்.சங்கரநாராயணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) து.ரமேஸ், அனைவருக்கும் கல்வித்திட்ட ஊடக மற்றும் ஆவணத்தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் நெ.கண்ணன், திருவாருர் வட்டார வள மைய பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ந.சங்கீதா, மற்றும் ஆசிரயப்பயிற்றுனர் இரா.பிருந்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்