முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிப்பு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      நீலகிரி

 

நீலகிரியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

கோடை கால பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் 2017ம் ஆண்டுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி கால்பந்து போட்டிகள் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானம், அச்சனக்கல் கிரா விளையாட்டு வளர்ச்சி மையம், கோத்தகிரி காந்தி மைதானம் , வெலிங்டன் ஹோலி இன்னோசென்ட் மைதானம் ஆகிய இடங்களில் வரும் மே மாதம் 15_ந் தேதி வரை காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், ஹாக்கி போட்டிகள் குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானம், உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், அருவங்காடு கார்டைட் பேக்டரி மைதானம் ஆகிய இடங்களில் மே மாதம் 8_ந் தேதி முதல் 31_ந் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் மே மாதம் 2_ந் தேதி முதல் 16_ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை இறகுப்பந்து போட்டியும், ஊட்டி அரசு அலுவலர்கள் நலச்சங்க கட்டிடத்தில் மே 1_ந் தேதி முதல் 15_ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜூடோ போட்டியும் நடக்கிறது.

கூடைப்பந்து, குத்துச்சண்டை

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் வரும் மே மாதம் 15_ந் தேதி வரை கூடைப்பந்து போட்டிகளும், கொளப்பள்ளியில் மே 3_ந் தேதி முதல் 17_ந் தேதி வரை காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கைப்பந்து போட்டியும் நடக்கிறது. குன்னூர் பெட்டட்டி விளையாட்டு மைதானத்தில் மே 10_ந் தேதி முதல் 25_ந் தேதி வரை காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை குத்துச்சண்டை போட்டிகளும் நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு அவரவர்களுக்கு தகுந்த மாதிரி சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்