முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடலூரில் மாற்றுத்திறனாளிகள் தனி கவன சிறப்பு பள்ளி திறப்பு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      கடலூர்

 

வடலூரில் அன்னை தெரசா மாற்று திறனாளிகள் தனி கவன சிறப்பு பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அன்னை தெரசா மாற்று திறனாளிகள் தொண்டு நிறுவன தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வட்டாச்சியர் ஜான்சிராணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி கலந்துகொண்டு மாற்று திறனாளிகள் பள்ளியை திறந்து வைத்து பேசினார்.

தொழிற்பயிற்சி வகுப்புகள்

 இப்பள்ளியில் 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. மேலும் கைத்தொழில் இன்று ஒவ்வொரு வருக்கும் முக்கியமாக ஒன்று,அந்த வகையில் இந்த பள்ளியில் கல்வி மட்டும் அல்லாமல் தையல் கலை பயிற்சி, செல்போன் பயிற்சி, புக்பைண்டிங்,ஓவியம், போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். ஆகையால் இதில் சேர்ந்துள்ள 66-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் மற்றவர்களை போல நம்மாலும் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.கைத்தொழில்களை கற்று கொள்ள வேண்டும் என்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் தாய் தந்தையார், மற்றும் முன்னால் தொழில் சங்க தலைவர் ஜோதி,என்.எல்.சி.அலுவலர் முதலைமுத்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்