முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூரில் போக்குவரத்துத்துறையின் சார்பாக பள்ளி வாகனங்களை ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் துவக்கிவைத்தார்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் காவலர் அணிவகுப்பு மைதானத்தில் போக்குவரத்துத்துறையின் சார்பாக பள்ளி வாகனங்களை  ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொள்ளும் பணியினை  மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   துவக்கிவைத்து, பார்வையிட்டு தெரிவிக்கையில்  உயர்நீதிமன்ற ஆணையின்படியும், போக்குவரத்து ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி தமிழ்நாடு மோட்டார் வாகன முறைப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012-ன் கீழ் மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்ளையும் தரஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து கொள்ளும் விதமாக இன்று(26.04.2017) கோவை மையம், கோவை தெற்கு மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 441 பள்ளி வாகனங்களுக்கு இன்று தர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ள காவல்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை ஆகிய துறைகள் மூலம் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இப்பணிணை மேற்கொண்டு வருகின்றனர்.

852 பள்ளி வாகனங்கள்

இந்த ஆய்வில் ஒவ்வொரு வாகனத்திலும் இவ்வாய்வில் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவி, அவசரக்கால வழி மற்றும் இருக்கை வசதிகள் ஆகியவை முக்கியமாக சோதனையிடப்படுகிறது.  கோவை மாவட்டத்திலுள்ள 4 வட்டார பகுதிகளில் இன்று(27.04.2017) 441 பள்ளி வாகனங்களும், நாளை(28.04.2017) 411 பள்ளி வாகனங்களும், என மொத்தம் 852 பள்ளி வாகனங்களை  ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த வாகனம் திருப்பி அனுப்பப்படும். உரிய பழுதுகளை சரிசெய்து இக்குழுவில் காண்பித்த பின்னரே பள்ளியில் வாகனத்தை ஏற்க அனுமதிக்கப்படும். இதற்காக பள்ளி வாகனங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும். மேலும், ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் விபத்துக்களை முற்றிலுமாக தவிர்த்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளப்படும். என மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து)  சரவணன் இ.கா.ப வட்டார போக்குவரத்து  அலுவலர்  உதயக்குமார், பால்ராஜ்,  குமாரவேல், பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  அருள் முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்  வனஜா, போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்