முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடியில் நடந்த முகாமில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பொது நுhலகத்துறை அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை மனு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      சேலம்

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பொதுமக்களிடம் நேரில் மனு பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

கோரிக்கை மனு

எடப்பாடி பயணியர் விடுதியில் நடைபெற்ற முகாமில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பொது நுhலகத்துறை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கருத்திருமன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரில் வழங்கினார். மனுவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1842 ஊர்புற நுhலகர்களுக்கு காலமுறை ஊதியம் 5200-2000 என்ற விகிதத்தில் வழங்க வேண்டியும் , இதற்காக தமிழக அரசுக்கு கூடுதலாக ரூபாய் 16 கோடி தேவைப்படும் என்ற விவரத்தினை தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி கிளை நுhலகத்தினை முதல் நிலை நுhலகமாக தரம் உயர்த்தவும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் சொந்த கட்டிடம் இல்லாத நுhலகங்களுக்கு புதிய நுhலக கட்டிடம் கட்ட வேண்டியும் மனு அளிக்கப்பட்டது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்