எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்த விபத்தில், இலங்கை சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 அடி உயரத்தில்
இலங்கையின் வெல்லவேத் நகரத்தை சேர்ந்தவர் அப்துல் (வயது 29). இவர் தனது மனைவி நசுரா (21), தாயார் லிஸ்பியா (54), சகோதரர் அர்ஷத் (34) ஆகியோருடன் கடந்த 26-ந் தேதி சென்னைக்கு சுற்றுலா வந்தார். பாரிமுனை மண்ணடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர்கள், சென்னை மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.ஒவ்வொரு முறை வெளியே சென்றபோதும் அப்துல், ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் முன்பதிவு செய்துள்ளார். அனைவரும் காரிலேயே சென்று வந்தனர். இந்த நிலையில், அவர்களின் சென்னை சுற்றுப்பயணம் நிறைவடைந்து வரும் 3-ந் தேதி மீண்டும் இலங்கை திரும்ப வேண்டியிருந்தது. இதனால், சுற்றுலாவின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால், பொருட்கள் வாங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை தியாகராயநகர் சென்று பொருட்கள் வாங்க திட்டமிட்டனர்.
அங்கு செல்வதற்காக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில், அப்துல் காரை முன்பதிவு செய்தார். காரில் அப்துல், அவரது மனைவி நசுரா, தாயார் லிஸ்பியா, சகோதரர் அர்ஷத் ஆகியோர் தியாகராயநகர் சென்றனர். பல்வேறு கடைகளில் பொருட்கள் வாங்கிய அவர்கள் மாலை 3.30 மணிக்கு அங்கிருந்து மீண்டும் மண்ணடியில் உள்ள தங்கும் விடுதிக்கு திரும்பினர்.அவர்கள் வந்த காரை பூந்தமல்லி அருகேயுள்ள புளியம்பேடு கிராமத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் (35) ஓட்டிவந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைகள் வெறிச்சோடி இருந்ததால், முத்தீஸ்வரன் காரை சற்று வேகமாக ஓட்டிவந்ததாக தெரிகிறது. மாலை 4.15 மணியளவில், கார் பாரிமுனை ராஜாஜி சாலையில் ஐகோர்ட்டு அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள சுரங்கப்பாதைக்குள் வேகமாக பாய்ந்தது. சினிமா படத்தில் வரும் காட்சியை போல் நடந்த இந்த விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த நேரத்தில் சுரங்கப்பாதையிலும் குறைவான வாகனங்களே சென்றதால், மேலே இருந்து சீறிப்பாய்ந்த கார், எந்த வாகனத்தின் மீதும் விழவில்லை. ஆனால், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், காரை ஓட்டிய டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தார். அதுவரை, சாலையில் சென்றவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விபத்து சம்பவத்தை கேள்விப்பட்டு அருகில் உள்ள சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்தனர். ஆம்புலன்ஸ் வேன் வந்ததும், 5 பேரும் மீட்கப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.நசுராவுக்கு மட்டும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. டிரைவர் உள்பட மற்ற 4 பேருக்கும் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக, யானைகவுனி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சென்னைக்கு குதூகலமாக சுற்றுலா வந்த இலங்கை பயணிகளுக்கு இந்த விபத்து பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



