முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை எளிய மக்களை தண்டிக்காதீர்கள் : போராராடும் மருத்துவர்களுக்கு தமிழிசை உருக்கமான வேண்டுகோள்

திங்கட்கிழமை, 1 மே 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - அரசு மருத்துவமனைகளையே நம்பி உயிர் வாழும் ஏழை எளிய மக்களின் உயிரை காப்பாற்ற மறுத்து மருத்துவர்கள் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு கோருவது சரியா என சிந்திக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக வெளியான அறிக்கை வருமாறு:
அரசு மருத்துவமனைகளையே நம்பி உயிர் வாழும் ஏழை எளிய மக்களின் உயிரை காப்பாற்ற மறுத்து மருத்துவர்கள் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு கோருவது சரியா? சிந்திக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு ரத்தானது
உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதி மன்ற தீர்ப்பின் படி தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த மருத்துவர் உயர் கல்வி பட்ட மேற்படிப்பு 50சதவீதம்  இட ஒதுக்கீடு ரத்தானது வருத்தமளிக்கிறது, அதற்கு உரிய சட்ட பூர்வமான நடைமுறைகளை அரசு மருத்துவர்கள் சங்கமும் தமிழக அரசின் மூலமாக ஈடுபடுவது தானே சரியான நடைமுறையாக இருக்க முடியும். நீதிமன்ற ஆணையை மெத்த படிக்க மருத்துவர்களே புரிந்து கொண்டு ஏற்க மறுத்து தெருவில் இறங்கி கொடூரமாக ஏழை எளிய நோயாளிகளின் உயிரை முன்னிறுத்தி போராடுவது என்ன நியாயம்? உங்கள் உயர் படிப்பு, இட ஒதுக்கீடு ரத்தானதற்கு அரசு மருத்துமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் எந்த விதத்தில் பொறுப்பாவார்கள்?

மாறுபட்ட போராமாக இருக்க வேண்டாமா?

மெத்த படித்த மருத்துவர்கள் போராட்டம் மற்றவர்களின் போராட்டத்திலிருந்து மாறுப்பட்டு இருக்க வேண்டாமா? தூங்கி போராட்டம் நடத்துவது குண்டூசியில் ரத்தம் சிந்தி போராடுவதும் மருத்துவ படிக்க வந்த மாணவர்களை படிக்கவிடாமல் அழைத்து வந்து போராடுவது அரசு மருத்துவர் சங்கம் கம்யூனிஸ்ட்டுகளின் பிடியில் சென்று விட்டதைக் காட்டுகிறது.

கம்யூனிஸ்ட்டுகள் முன்னிற்கின்றன

உழைக்கும் வர்க்கத்திற்காக போராடுவதும் தாங்கள்தான் என கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள் தான் அரசு மருத்துமனைக்கு வரும் ஏழை, எளிய அன்றாட வருமானம் பெரும் எளியவர்களை வருத்தும் டாக்டர்கள் போராட்டத்தை பல்வேறு புனைப் பெயரில் டாக்டர்கள் சங்கம் என்ற பெயரில் 10 நாளாக முன்னின்று நடத்தி வருகிறார்கள் என்ற உண்மை அம்பலமாகி உள்ளது.

தமிழக தலைவர்களால் திசைமாறாதீர்கள்

அரசு மருத்துவர்களின் போராட்டக்களத்தில் தினமும் வரும் அரசியல்வாதிகளால் உங்கள் போராட்டம் அரசியலாக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த போராட்டம் என்றாலும் வழக்கம் போல் உங்கள் போராட்டத்திலும் ஏன் பாரத பிரதமர் திரு. மோடி மீது வசைப்பாடப்படுகிறது? பட்டமேற்படிப்பில் 50சதவிதம் சதவீத இட ஒதுக்கீடு ரத்தானத்திற்கும் திரு. மோடி அவர்களுக்கு என்ன நேரடி சம்பந்தம்? 60 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள் செய்யாத வகையில் பட்ட மேற்படிப்பிற்காண இடங்களை ஒரே நேரத்தில் 4000 இடங்கள் உயர்த்தியதோடு இந்த ஆண்டுக்குள் இன்னமும் 1000 உயர்த்தி மொத்தம் 35,000 இடங்களாக உயர்த்திய மோடி அரசை தமிழகத்தின் இட ஒதிக்கீடு ரத்தானதற்கு ஏன் வசைபாடுகிறார்கள்?  நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சட்டப்படி மீண்டும் கிடைக்கச்செய்ய உங்களை தினமும் வாழ்த்தி மத்திய அரசையும், மோடி அவர்களையும் வசைபாடிச் செல்லும் தமிழக தலைவர்களால் திசைமாறாதீர்கள் என்று வேண்டுகிறேன். இவர்களால் உங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷமிட மட்டுமே முடியுமே தவிர உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது.

ஏழை, எளிய  மக்களை

ஏழை எளிய அரசு மருத்துவமனை நோயாளிகளை டாக்டர்கள் வதைப்பதுதான் சமூக நீதியா? மருத்துவர்களான உங்களை கடவுளாக நம்பும் ஏழை, எளிய மக்கள் உங்கள் உயர்கல்வி என்ற சுயநலத்திற்காக ஏன் தண்டிக்கிறீர்கள். மருத்துவ உயர்கல்வி படிப்பு நோயாளிகளின் உயிரை காப்பாத்துவதுதானே? அவர்களின் உயர் பலி வாங்கி உங்களுக்கு உரிமை கோருவது நியாயமா? சிந்திக்க வேண்டும். உங்களின் உயர்கல்வி சுயநலத்திற்காக அரசு மருத்துவமனையில் ஏழைகள் மடிய வேண்டுமா?

உங்கள் உணர்வை காட்டுங்கள்

உங்களின் கோரிக்கைகளின் நியாயம் இத்தகைய தொடர் போராட்டத்தால் மறைந்துவிடும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உங்களுக்கு எதிராக போராட வேண்டி வரும், அரசு உங்கள் கோரிக்கையின் அழுத்தத்தை நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கைவிடாமல் உங்கள் உணர்வை காட்டுங்கள் உதாரணத்திற்கு அரசு மருத்துவமனை வாளகத்திலேயே அமர்ந்து பணி நேரத்திற்கும் மேலாக ஒரு மணி நேரம் அதிகம் வேலை செய்து உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள், நோயாளிகளை பரிதவிக்க விடுவது மருத்துவ தொழில் தர்மத்திற்கு எதிரானது ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் நோயாளிக்கு தரவேண்டிய சிகிச்சையை எக்காரணத்திற்க்கொண்டும் எவருக்கும் தர மறுக்க மாட்டேன் என்பது தான் ஒவ்வொரு மருத்துவரும் ஹிப்போ கிரடிஸ் உறுதி மொழிக்கு ( Hippocrates Oath) எதிரானது அல்லவா?

அரசு தலையிட வேண்டும்

ஆகையால் தமிழக முதலமைச்சரும், சுகாதார துறை அமைச்சரும் தலையிட்டு அரசு மருத்துமனைக்கு வரும் ஏழை, எளிய சாமான்ய மக்களின் உயிர்கள் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் மருத்துவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago