Idhayam Matrimony

தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
Tasmac-Shop 2023 04 25

Source: provided

ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் வரும் 28, 29 மற்றும் ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். மேலும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து