பொன்னேரியில் 103 பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் : மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      திருவள்ளூர்
Punneri 2017 05 02

பொன்னேரி வட்டத்திற்க்குட்பட்ட காட்டூர் ஊராட்சியில் அடங்கிய காட்டூர் இருளர் காலனி மக்களுக்கு நீண்ட காலமாக சாதி சான்றிதழ்களும் குடியிருப்பு பட்டாக்களும் வழங்கபடாமல் இருந்தன.பொன்னேரி சாராட்சியர் தண்டபாணியின் பெரும் முயற்சியால் 103 பேருக்கு சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டது.

 அதிகாரிகள்

இச்சான்றிதழ்களை வழங்குவதற்கான நிகழ்ச்சி பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன்,சாராட்சியர் தண்டபாணி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர். பொன்னேரி வட்டாட்சியர் ஐவண்ணன்,தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன்,எஸ்.சி.எஸ்.டி நல வட்டாட்சியர் கார்த்திகேயன்,துணை வட்டாட்சியர் ரஜினிகாந்த், பொன்னேரி பேரூராட்சி நிர்வாகிகள் உபயதுல்லா,திருமலை,கூட்டுறவு வங்கி தலைவர்கள் வெற்றிவேல் ராமலிங்கம்,ஆறுமுகம் இதர நிர்வாகிகள் பொன்னேரி பா.சங்கர்,ஆண்டார்குப்பம் மதி,சம்பத்,சலீம்,முனுசாமி,பிள்ளையார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: