முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல்லில் மே தின விழா பொதுக்கூட்டத்தில் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி தொடரவேண்டும்: அமைச்சர் பி.தங்கமணி பேச்சு

வியாழக்கிழமை, 4 மே 2017      நாமக்கல்

 

நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பழ.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச்செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக செய்தி தொடர்பு குழு உறுப்பினர் ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயின் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். கழக பொதுக்குழு உறுப்பினரும் திருச்செங்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பொன்.சரஸ்வதி, நாமக்கல் நகர கழக செயலாளரும் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் உட்பட ஏராளமானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச்செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பேசியதாவது,

பொதுக்கூட்டம்

தமிழகத்தின் பாதுகாவலராக இருந்து ஒன்னரை கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக தமிழகத்தை வாழவைத்த தெய்வமாக என்றென்றும் நம் நெஞ்சிலே குடியிருக்கின்ற இதய தெய்வம் மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு இந்நேரத்தில் அவரை வணங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க இப்பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை என்ற சட்டத்தை கொண்டுவந்து அதை அமுல்படுத்தியது மே 1-ந்தேதி தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தான் நாம் மே தின பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றோம். நாம் இதை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். கழகம் இரண்டாக உடைந்து விட்டது. இங்கே எவ்வளவு பேர் வருவார்கள் என்று மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். கழகம் இரண்டாக உடைந்துவிட்டது இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் இந்த கூட்டத்தைப்பார்த்து நாம் தப்பு கணக்கு போட்டுவிட்டோம் என்று நினைக்கும் நிலை வந்துவிட்டது. நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 33 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும்நிலையை உருவாக்கித் தந்துள்ளார்கள் என்று சொன்னால், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் குறிப்பாக பெண்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருப்பதினால் அம்மா தான் வரவேண்டும். அம்மாவின் ஆட்சிதான் எங்களுக்கு வேண்டும். அம்மாவின் திட்டம்தான் எங்களுக்கு வேண்டும் என்ற முழு மனதோடு பெண்களும் பொதுமக்களும் ஒரே மனநிலையில் வாக்களித்த காரணத்தினால் தொடர்ந்து இரண்டாவது முறையாக நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். எதிர்பாராதவிதமாக அம்மா அவர்கள் உடல்நலம் குன்றிவிட்டார்கள். 22ம் தேதி அம்மா அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. ஆனால் 21ம் தேதிக்கூட அம்மா அவர்கள் தலைமை செயலகம் வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டிவிட்டு முடிந்த திட்டங்களை திறந்து வைத்துவிட்டு, ஒரு முக்கியமான திட்டத்தை துவக்கிவைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

அந்த திட்டம் என்னவென்றால் தாய்மார்கள் எதிர்பார்க்கின்ற திட்டமான தாலிக்கு அரைப்பவுன் தங்கத்தை ஒரு பவுனாக நான் உயர்த்தி கொடுப்பேன் என்று சொன்னதை அம்மா அவர்கள் இன்று நிறைவேற்றி கொடுத்து, அனைத்து தாய்மார்களின் நெஞ்சிலும் நிலைத்து நிற்கின்றார்கள் என்று சொன்னால் இந்த தாய்மார்களின் மீது அம்மா அவர்கள் எவ்வளவு பாசத்தோடு இருந்திருக்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும். இன்றைய தினம் கழகம் இரண்டாக பிளவுபடாதா. இரண்டு அணியாக போய் நாம் அதிலே உள்ளே புகுந்து குளிர்காய முடியாதா என்று திமுக-வினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அம்மா அவர்கள் வருகின்ற பொழுது என்ன சொல்லிவிட்டு சென்றார்கள். எமக்கு எதிரி என்பது திமுக மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் அம்மா அவர்களுக்கு இந்நிலை ஏற்பட திமுக தான் காரணம் என்பது உங்களுக்கு தெரியும். பொய் வழக்கை அம்மா மீது போட்டு இந்தளவிற்கு அவர்களுக்கு உடல்நலம் பாதிக்க திமுக தான் காரணம். இன்னும் நான்கு ஆண்டு ஆட்சியுள்ளது. அம்மாவின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும். நமக்குள் போட்டிபோட்டுக் கொண்டு அதனால் திமுக வந்துவிட்டால், அம்மாவின் ஆத்மா நம்மை மன்னிக்காது. கழக தொண்டர்களும் மக்களும் அதைதான் விரும்பினார்கள். சட்டமன்றத்திலேயே திமுக-வினர் எவ்வளவு ரகளை செய்தார்கள் என்பதனை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். திமுக-வினருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். அம்மா அவர்கள் இல்லாத காரணத்தினால் இயக்கத்தை உடைத்துவிடலாம் என்று திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. சட்டமன்றத்திலேயே தகராறு செய்து எப்படியாவது சட்டமன்றத்தை முடக்கவேண்டும் என்று நினைத்தார்கள். புரட்சித்தலைவர் மறைந்தபோது இதேபோல் சட்டமன்றத்திலே ஒரு தகராறு செய்து டிஸ்மிஸ் செய்ய வைத்தார்கள். அப்பன் எவ்வழியோ மகனும் அவ்வழியில் இந்த சட்டமன்றத்தை எப்படியாவது முடக்கவேண்டும் என்று அன்று சட்டமன்றத்தில் தகராறு செய்து சட்டமன்றத்தை நடத்தவிடாமல் செய்தார்கள்.

ஆனால் நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள். எங்களுக்கு இட்டிருக்கின்ற கட்டளை எல்லாம் மக்களை பார்க்க வேண்டும். தொண்டர்களை பார்க்கவேண்டும், வாய்கூசுகின்ற அளவிற்கு எங்களை திட்டினார்கள். ஆனால் 122 சட்டமன்ற உறுப்பினர்களும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லுகின்ற அளவிற்கு அம்மா அவர்கள் காட்டியவழியில் இரு கைகளையும் கட்டிக்கொண்டு நாங்கள் 3 மணிவரை அன்றைய தினம் உறுதியுடன் பொறுமையாக இருந்த காரணத்தினால்தான் இன்றைய தினம் அம்மா அவர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி தொடரவேண்டும், கட்சி தொடரவேண்டும் என்று அம்மா அவர்கள் சட்டமன்றத்திலேயே கூறிவிட்டு சென்றதனால், இது சட்டமன்றத்திலும் பதிந்துள்ளது, மக்கள் மனதிலும் பதிந்துள்ளது. கருணாநிதி ஆட்சிக்காலத்திலேதான் விவசாயிகளை கோயம்புத்தூர் பெருமாநல்லூரிலே சுட்டுக்கொன்றார்கள். இன்று விவசாயிகளுக்கு முழு அடைப்பு போராட்டம் என்று கூறுகிறார். காவேரியிலிருந்து வரும் தண்ணீரை நீங்கள் தரவேண்டாம். என்மீது உள்ள வழக்கை நீங்கள் வாப்பஸ் பெற்றுக்கொண்டால் போதும். நான் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகின்றேன் என்ற கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் இன்று விவசாயிகளுக்கு நீலீக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

மக்களை சந்தித்து இனிமேல் ஆட்சிக்குவரமுடியாது என்பதை அறிந்த திமுக நமக்குள் ஒருபிளவை ஏற்படுத்தி அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வர துடிக்கிறது. ஆனால் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். இனி வரயிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அம்மா அவர்களின் ஆட்சியே தமிழகத்திலும் தொடரும். ஸ்டாலினுக்கு இனி இறக்கு முகம்தான். வறட்சிக்காக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான். அம்மா அவர்கள்தான் வழங்கினார்கள். இப்போதும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வளவு வறட்சியிலும்கூட மோசமான நிதிநிலைமையிலும் கூட அம்மா அவர்களின் திட்டங்கள் ஒன்றுகூட நிறுத்தப்படவில்லை. இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்