திருப்பூர் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் சட்ட மன்றப் பேரவைத் தலைவர் தனபால் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      திருப்பூர்
aa

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவ - மாணவியர்கள் இருபாலர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   முன்னிலையில்  தமிழக  சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால்  வழங்கினார்கள்.

சிறப்பான திட்டங்கள்

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அவிநாசி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கல்லூரி அமையவேண்டும் என்பதாகும். அவ்வாறு நான் இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் முதல் கோரிக்கையாக இப்பகுதியில் உள்ள மாணவ- மாணவியர்கள் கல்வி பயிலுவதற்காக வெளியூர்களுக்கு செல்வதால் இப்பகுதியில்  அரசு கல்லூரி அமைய வேண்டும் என்று மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  இடத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையினை கணிவுடன் ஏற்றுக்கொண்ட அம்மா  இப்பகுதியில் அரசு கலை கல்லூரி அமைப்பதற்கான ஆணையினை கடந்த ஆண்டு பிறப்பித்தார்கள். அதனைத்தொடர்ந்து

இந்த கல்வியாண்டில்

அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இடத்தில் இக்கல்வியாண்டில் (2017- 2018) முதற்கட்டமாக பி.ஏ. (பொருளியல்), பி.ஏ.(ஆங்கிலம்) மற்றும் பி.காம் ஆகிய மூன்று இளநிலை பாடப்பிரிவுகள் 150 மாணவ- மாணவியர்கள் இருபாலருக்காக தொடங்கப்பட்டுள்ளது என்பதினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த கல்வி ஆண்டிற்குள் அனைத்து பாடப்பிரிவுகளுமே உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

7.90 கோடி நிதி ஒடுக்கீடு

மேலும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் நிரந்தரமாக கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசால் ரூ.7.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் போர்க்கால அடிப்படையில் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  இன்று தொடங்கப்பட்டுள்ள கல்லூரியில் பயிலக் கூடிய மாணவ- மாணவியர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும் என  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர்  தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின்போது,  திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார்  கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பரமேஸ்வரி, உதவி இயக்குநர் வேலுசாமி, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பொ) இராமையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜன், அவிநாசி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கருப்புசாமி, அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சுப்பிரமணியம், வேலுசாமி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவ-மாணவியர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: