ஊட்டியில் மாபெரும் காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      நீலகிரி
7ooty-1

ஊட்டியில் மாபெரும் காட்டுயிர் அரியவகை புகைப்படக் கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

கோடை விழா

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம். சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை நடத்துகின்றன. வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை விற்பனை நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது- இந்தாண்டுக்கான நீலகிரி கோடை விழா நேற்று(6_ந் தேதி) கோத்தகிரியில் காய்கறி காட்சியுடன் தொடங்கியது. கோடைவிழாவின் ஒரு பகுதியாக ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை விற்பனை நிலையத்தில் மாபெரும் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

இயற்கை வளங்கள்

இக்கண்காட்சியில் நீலகிரியில் இயற்கை வளங்கள், காடுகள், வனத்தில் உள்ள விலங்குகள், பறவை இனங்கள், நூறாண்டுகளுக்கு முந்தைய ஊட்டியின் புகைப்படம்  உள்ளிட்ட அரிய வகையான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இக்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் தவறாமல் பார்வையிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தெற்கு கோட்ட வன அலுவலர் ராஜ்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன், உதவி சுற்றுலா அலுவலர்கள் செல்வராஜ், துர்கா, வனச்சரகர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் இருக்கும் வனப்பகுதிகள், பறவைகள், வன விலங்குகள், நீரோடைகள் ஆகியவற்றின் புகைப்படங்களும், இயற்கை மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்தும் என சுமார் 500க்கும் மேற்பட்ட படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இக்கண்காட்சியானது இம்மாதம் 31_ந் தேதி  தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை காண நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. எனவே இக்கண்காட்சியை ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: