முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையில் நடைபெற்று வரும் ரசாயண கலவை பூசும் பணி அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

சுற்றுலாத்துறை அமைச்சர்  வெல்லமண்டி என். நடராஜன் கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்  அ. விஜயகுமார் ஆகியோர்கள் முன்னிலையில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையில் நடைபெற்று வரும் இரசாயண கலவை பூசும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 முதலிடம்

 அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு, சுற்றுலாதுறையின் மூலம், சுற்றுலா தலங்களை மேம்படுத்திட, பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அம்மா அவர்களின் அரசு, தொடர்ந்து  3-வது ஆண்டாக இந்தியாவிலே, தமிழ்நாடு சுற்றுலா துறை முதலிடத்தை பிடித்துள்ளது. ஏனென்றால், இந்தியாவிலே, தமிழ்நாட்டிற்கு தான் அதிகமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலம் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்தும் வருகை தருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தென்கோடியில் உள்ள இந்த மாவட்டத்தில், பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளதால், அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். 

ரசாயண கலவை பூசும் பணி

இன்றைய தினம், எனது தலைமையில், கலெக்டர்  மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகியோர்களுடன், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையில் நடைபெற்று வரும் இரசாயண கலவை பூசும் பணிகளை ஆய்வு செய்யப்பட்டது.  இந்த சிலையின் பராமரிப்பு பணிகள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம், 2002-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலையினை உப்பு காற்றிலிருந்து பாதுகாப்பதற்காக,  4 வருடங்களுக்கு ஒருமுறை, பாலி சிலிக்கான் என்கிற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.  கடந்த முறை (2013) இப்பணிகளை தொல்லியல் துறை அலுவலர்கள் அடங்கிய நிபுணர் குழு வழிகாட்டுதலின்படி, சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.  அம்மா அவர்களின் அரசு, திருவள்ளுவர் சிலைக்கு வர்ணம் பூசுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

ரூ.86 லட்சம் செலவில்

அதன்படி, 2016-ம் ஆண்டில், திருவள்ளுவர் சிலைக்கு சுமார் ரூ.86இலட்சம் செலவில், 17.04.2017 முதல் 13.10.2017 வரையுள்ள 6 மாத காலங்களில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறும்.   முதற்கட்ட பணியாக, சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்களால், சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள், இந்த சாரம் கட்டும் பணி முடிவடையும்.  அதன்பின்பு, சிலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர், ரசாயண கலவை பூசும் பணிகளும் நடைபெறும்.

சிறப்பு குழுக்கள் அமைப்பு

இங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளையும், கண்காணிக்க, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் அவர்களின் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இவர்கள், நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து, அதனை, ஒவ்வொரு கட்டமாக அரசுக்கு தெரிவுபடுத்துவார்கள்.  மேலும், இப்பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, பொலிவுடன் திருவள்ளுவர் சிலையை காண, சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது  என தெரிவித்தார்.   பின்னர், விவேகானந்தா நினைவு மண்டபத்திற்கு பார்வையிட, வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளிடம் படகு போக்குவரத்து துறையின் சேவைகளை கேட்டறிந்தார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகம்)  ஏ. சுகுமார், உதவி செயற்பொறியாளர்  வி. பால் ஜெபஞானதாஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர்  நெல்சன், மேலாளர்  சி.ஆர். ஜாக்சண் வில்லியம், பூம்புகார் மேலாளர்   எம். வின்ஸ்லி ராய், உதவி மேலாளர்  ஜெ.இ.ஜெ. ரவீந்திரகுமார், அரசு வழக்கறிஞர் ஞானசேகரன்,  கனகராஜன்,  வேல்முருகன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்