போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 13 மே 2017      கடலூர்

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் சார்பில் 15.05.2017 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கடும் நடவடிக்கை

 இக்கூட்டத்தில், வேலை நிறுத்த காலத்தில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் தேவையான அளவு பேருந்துகளை இயக்கவும், வேலைநிறுத்தத்தின் போது பேருந்துகள் மீது கல் வீசுதல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் மற்றும் வேலைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும், முக்கிய வழித்தடங்களில் போதுமான அளவு தனியார் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தனியார் பேருந்து உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

பலர் பங்கேற்பு

 இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர், சிதம்பரம் விருத்தாசலம், அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கடலூர் சிதம்பரம், கிளை மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கடலூர் சிதம்பரம், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: