முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஆண்டில் விபத்தின்றி பள்ளி வாகனங்களை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாராட்டு

புதன்கிழமை, 17 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கடந்த ஆண்டில் விபத்தின்றி பள்ளி வாகனங்களை ஓட்டிய ட்டுநர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாராட்டினார்கள்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 2013ம் ஆண்டு முதல் பள்ளி வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்குவதற்கு முன்பாக ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்த சான்றிதழ் பெற்றவுடன் பள்ளி மாணவ, மாணவியர்களை ஏற்றி இறக்க வேண்டும் என்ற உத்தரவுப்படி நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய், திண்டுக்கல் மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் ஆகியோர் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு மோட்டார் வாகன பகுதி அலுவலகத்திற்கு உட்பட்டுள்ள  அனைத்து பள்ளி வாகனங்களும் அதாவது வத்தலக்குண், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 114 பள்ளி வாகனங்கள்  ஆய்வு நடைபெற்றது. வத்தலக்குண்டு மோட்டார் வாகன பகுதி அலுவலக  ஆய்வாளர்கள் செல்வம், குமரன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களை முழுமையான ஆய்வு செய்தார்கள். ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட முழுமையாக பாதுகாப்பான வாகனங்களை அனுமதி வழங்கி சான்றிதழ் கொடுத்தார்கள். ஒரு சில பேருந்துகள் சில வேலைகளை செய்து முடித்தவுடன் சான்றிதழ் தருவோம் என்று அனுப்பி வைத்தார்கள். முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் வாகன ஓட்டுநர்கள் அனைவருக்கும் ஆலோசனை நடைபெற்றது. இதில் கடந்தாண்டில் விபத்தின்றி கல்வி வாகனங்களை சிறப்பாக ஓட்டிய அனைத்து ஓட்டுநர்களையும் பாராட்டினார்கள். அதன் பின்பு தங்களுடைய அறிவுரையில் பள்ளி வாகனத்தை இயக்கும் போது தொலை தொடர்பு சம்பந்தமான  கருவிகள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது வாகன ஓட்டும் போது பிறரிடம் செல்போன் வாங்கி உபயோகிக்கக் கூடாது என்று ஆலோசனை வழங்கிய பின்பு அனைவரும் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்தார்கள். கடந்தாண்டை போல சாலை விதிகளை மதித்து விலைமதிப்பில்லா உயிர்களை காப்பாற்றி விபத்தில்லா ஆண்டாக உறுதி மொழி அனைவரும் எடுத்தார்கள். மேலும் கொடைக்கானலில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் கொடைக்கானலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்