முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர் கோவில் நாராயண வாவி தெப்பத்தில் மழை பெய்ய வேண்டி வருண ஜெபம்

புதன்கிழமை, 17 மே 2017      மதுரை
Image Unavailable

அழகர்கோவில் - தமிழகத்தில் உள்ள அணைகள், கண்மாய், குளங்கள் மழை பெய்து நீர்நிலை உயர வேண்டி மதுரை புறநகர் மாவட்ட அதிமுக (அம்மா அணி) சார்பில் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் மூலவர் சன்னதி முன்பாக உள்ள மண்டப வளாகத்தில் வருண ஜெப பூஜை நடந்தது. இதில் நூபுர கங்கை தீர்த்தத்துடன் கூடிய கலசத்திற்கு வண்ண மலர்கள் கொண்டு திருக்கோவில் பட்டர்களால் பூஜை நடத்தப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க, சுந்தரவள்ளி யானை முன் செல்ல கோவில் பட்டர்கள் பூரண கும்பத்தை அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.தொடர்ந்து அழகர் மலை அடிவாரத்தில் உள்ள நாராயணவாவி தெப்பத்தில் அந்த கலசத்தில் உள்ள பூஜை தீர்த்தம் வருணஜெப மந்திரங்கள் முழங்க ஊற்றப்பட்டது.பின்னர் தீபாராதனையும்,பூஜையும் நடந்தது.
 இந்த நிகழச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். மேலூர் தொகுதி எம்.எல்.ஏ பெரிய புள்ளான் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசன், கருப்பையா,  வழக்கறிஞர் ரமேஷ் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன்ஆகியோர் முனனிலை வகித்தனர்.வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வருணஜெப பூஜையை தொடங்கி வைத்தார்.
  இந்த பூஜையில் ஒன்றிய செயலாளாகள் கல்லணை ரவிச்சந்திரன், சோமாசி, பேரூர் செயலாளர்கள் உமாபதி, அழகுராசா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில், கள்ளழகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மழை வேண்டி விசேஷபூஜை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்