முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மாயமான ஐந்து மீனவர்கள் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து உயிருக்கு போராடிய 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 18-ம் தேதி மதியம் 2 மணியளவில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த மணி (20) ராமன் (45), செல்வம் (45), குமரன்(28) குணசீலன் (35) ஆகிய ஐந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பைபர் படகு

வங்க கடலில் வெப்பசலனம் காரணமாக சீற்றத்துடன் பலத்த சூறைக் காற்றும் வீசி வந்த நிலையில் இவர்களுடைய படகு தலைகுப்புர கவிந்தது உயிருக்கு போராடி வந்தனர்.இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களை 5 பைபர் படகில் சென்று தேடும் பணியில் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர் மேலும் கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்குபடி மத்திய, மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதற்கிடையில் உயிருக்கு போராடிய நிலையில் 5 மீனவர்கள் இருப்பதை கண்டு அந்த வழியே மீன்பிடித்துக் கொண்டு வந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை மீட்டு தங்கள் படகில் ஏற்றிக் கொண்டு நேற்று மாலையில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தனர். பின்னர் ஐந்து மீனவர்களும் ஆறுகாட்டுத்துறை வந்தடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்