முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட  பகுதிகளில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலக்கட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
  தற்போது நிலவும் வறட்சியான காலக்கட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக குடிநீர் விநியோகம் சீரான முறையில் மேற்கொள்ள போர்;க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் 1192 குடிநீர்; திட்டப் பணிகள் ரூ.17.68 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.  11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரகப்பகுதிகளில் 968 குடிநீர்; திட்டப் பணிகள் ரூ.10.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று 90 சதவீதப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.  ராமநாதபுரம் ஒன்றியத்தில் 118 குடிநீர்; திட்டப் பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பிலும், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 185 குடிநீர்; திட்டப் பணிகள் ரூ.1.24 கோடி மதிப்பிலும் நடைபெற்றன.
 அதனடிப்படையில் தற்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், எருமைப்பட்டி ஊரணியில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைத்திட ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை  மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாரனூர் மற்றும் கலங்காபுளி ஆகிய கிராமங்களில்  14ஆவது நிதிக்குழு  2016-2017 ன் கீழ் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள கைப்பம்பு மூலம் பொதுமக்களுக்கு குடிநீர்; விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 மேலும் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாரனூர் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்; ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், பாரனூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட சேமிப்புக் கிடங்கில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதன்பின்பு ஆர்.எஸ்.மங்கலம் அரசு கால்நடை மருந்தகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானிய விலையில் கால்நடைகளுக்கு தேவையான உலர்தீவனங்கள் வழங்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டார். உலர்தீவனங்களின் இருப்பு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  பின்பு ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  குடிநீர்; தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
 இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, துணை இயக்குநர் (வேளாண்மை விற்பனை மையம்) ராமசாமி பாண்டியன், வேளாண் அலுவலர் அம்பேத்குமார், வேளாண்மைத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்