முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம், குடிநீர் விநியோகம் மற்றும் வருவாய் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் : 1 அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி நிவாரணம், குடிநீர் விநியோகம் மற்றும் வருவாய் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி முதன்மை செயலர் () வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால். , ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று(26.05.2017) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

வறட்சி நிவாரணம், குடிநீர் விநியோகம் மற்றும் வருவாய்த்துறை ஆய்வுக் கூட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பேசியதாவது:புரட்சித்தலைவி அம்மா மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்கள். அந்தவகையில் தற்போது தமிழக அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இருந்து மக்களை எந்த ஒரு துயரமும் அடையக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதன் மூலம் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் நோக்கமானது மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வறட்சி பாதிப்புகளை முற்றிலுமாக துடைத்தெறிந்து அதன் மூலமாக மக்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே ஆகும். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 32 இலட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கு எடுக்கப்பட்டு அதற்கு தேவைப்படுகின்ற இடுப்பொருள் நிவாரண உதவி தொகையாக ரூ.2,447 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை முழுமையாக அந்த அந்த பகுதிகளுக்கு தாலுகா வாரியாக, நாம் எப்படி வெற்றிகரமாக மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கின்றோம் என்பதை பற்றி ஆய்வு செய்வதற்காகவே ஆகும். இதுவரை எந்த மாநிலமும் செய்யாத ஒன்றாக வங்கிக்கணக்கிலே வரவு வைக்கும் ஒரே அரசு நமது தமிழகஅரசு தான்.

இன்று வறட்சி பாதித்த பகுதிகளில் அரசின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. தற்பொழுதுள்ள வறட்சி கடந்த 140 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வறட்சி நிவாரண உதவித்தொகையாக 32,30,191 விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் இடுப்பொருள் நிவாரணம் வழங்கியதும் நமது தமிழ்நாடு அரசு தான். வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனையும் இதற்காக ரூ.6.91 கோடி விடுவிக்கப்பட்டு ஏற்கனவே அதற்கான தீவனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்டம்

2016-2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை சட்டமன்ற பேரiவியல் சமர்ப்பித்து உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் கடலோர மாவட்டங்களில் விரிவான வெள்ள தடுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேலும் திட்டத்தின் குறிக்கோளாக அனைத்து பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளையும் கண்டறிதல், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் அபாயக்குறைப்பு செய்தல், வெள்ளம், புயல் மற்றும் சுனாமி பாதிப்புகளின் போது சமுதாயத்தின் எதிர் கொள்ளும் தன்மையினை அதிகரித்தல், குறிப்பாக விவசாயிகளின், எதிர்கொள்ளும் தன்மையினை அதிகரித்தல், அபாயத்தணிப்பு மற்றும் குறைப்பு நடவடிக்கைகளின் மூலம், பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்துதல்.

இதன்படி சென்னையிலும், பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய கடலோர மாவட்டங்களிலும் விரிவான வெள்ளத் தடுப்புத் திட்டம் தயார் செய்வதற்கு 11 ஆற்றுப்படுகைகளுக்கு தலா ரூபாய் 4 இலட்சம் வீதம் 8 கடலோர மாவட்டங்களுக்கு ரூபாய் 44 இலட்சம் தொகையும், மற்றம் மாநில அளவில் இந்த ஆய்வு அறிக்கைகளை தொகுத்து திட்ட வரைவு தயாரிக்கும் பணிக்காக ரூபாய் 10 இலட்சம் தொகையும் ஆக மொத்தம் ரூபாய் 54 இலட்சம் தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.ரத்தினவேல், மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.(திருச்சி), டி.பி.ராஜேஷ்.(கடலூர்), எல்.நிர்மல்ராஜ்.(திருவாரூர்), .அண்ணாதுறை.(தஞ்சாவூர்), பேரிடர் மேலாண்மை இயக்குநர் லதா, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர்(மணப்பாறை), எம்.செல்வராஜ்(முசிறி), பொதுப்பணித்துறை தலைமைச் செயலாளர் பக்தவச்சலம், மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் மற்றும் வருவாய்த்துறை கோட்டாட்சியர்கள், பிறத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து