அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

திங்கட்கிழமை, 29 மே 2017      திருவள்ளூர்
Punneri 2017 05 29

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம்,பழவேற்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் புனராவர்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைப்பெற்றது.

அபிஷேக ஆராதனைகள்

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டை வள நாடானா பழவேற்காட்டில் கிராமத்தின் காவல் தெய்வமாய் கிராமதேவதையாய் வீற்றிருந்து தற்போது வரை பழவேற்காடு மக்களின் துயர்தீர்த்து வரும் அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் அம்பிகைக்கும்,ஸ்ரீ விநாயகர்,விமான கோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா எனப்படும் மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

கிராம தேவதை வழிபாடுகளுடன் தொடங்கி,நான்கு கால யாக பூஜைகள் நடைப்பெற்று பூரணாஹூதி யாத்ராதானம் கடம் புறப்பட்டு விமான கோபுரங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்று புனித நீர் தெளிக்கப்பட்டது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.சிவஸ்ரீ கந்தஸ்வாமி சிவாச்சாரியார் சர்வ சாதகம் செய்தார்.

பரம்பரை தர்மகர்த்தா ரவிசேகர் செட்டியார் மற்றும் விழாக்குழுவினர்,கிராம பொதுமக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து