திருவொற்றியூரில்; தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதன்கிழமை, 31 மே 2017      சென்னை

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கடை கடையாக சென்று பறிமுதல் செய்தனர்.

 பறிமுதல்

உலக புகையிலை தினமான நேற்று விழிப்புணர்வை ஏற்படு;த்தும் நோக்கியில் திருவொற்றியூர் மண்டலத்தில் அடங்கிய பெரியார்நகர், அஜாக்ஸ், மாணிக்கம்நகர், கிராமத்தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனை, வழிபாட்டுதலங்களில் உள்ள வியாபார கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை மண்டல சுகாதார அலுவலர் டாக்டர்.இளஞ்செழியன் பகுதி சுகாதார அலுவலர் எஸ்.ஷேக்மீரான், சுகாதாரத்துறை அதிகாரிகள் கங்காதேவி, சதீஸ்குமார், ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர். பறிமுதல் நடவடிக்கையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பீடி, சிகரெட், பொடி, கேன்ஸ் உட்பட போதை தரும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து